ஏப்ரல் முதல் வாரத்தில் நாடு தழுவிய வேலை நிறுத்தம்..!!!


அரசு நிர்வாக அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தொடர்ந்து சாதகமான பதில் அளிக்காததால், ஏப்ரல் முதல் வாரத்தில் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக 18 தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

இன்று (22) காலை நிர்வாகப் பரீட்சை திணைக்களத்தின் நிறைவேற்று அதிகாரி தொழிற்சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மார்ச் மாதம் 31ஆம் திகதி அமைச்சரவையில் உரிய தீர்வுகள் சமர்ப்பிக்கப்படும் என எதிர்ப்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ள அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் குழு, இல்லாவிடின் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here