யாழ்ப்பாணம் - சாட்டி கடலுக்குள் நீராடச் சென்ற சிறுமியொருவர் நீரில் மூழ்கி கடந்த சனிக்கிழமை (16) உயிரிழந்துள்ளார்.
அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுமி அவரது நண்பியுடன் நீராடிக்கொண்டிருக்கும் போது நீரில் அடித்து செல்லப்பட்டார்.
இதன்போது அவரது நண்பி சத்தமிட்ட வேளை அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.