யாழில். குழந்தை உயிரிழப்பு..!!!



தாய்ப்பால் புரைக்கேறியதில் பிறந்து 28 நாட்களேயான குழந்தை ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளது.

கொக்குவில் மேற்கைச் சேர்ந்த சசிகுமார் பிரதீபா என்ற பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை (22) தாயார் சிசுவுக்கு பாலூட்டிக் கொண்டிருந்த சமயம் குழந்தை மயங்கி உள்ளது.

இதனை தொடர்ந்து உடனடியாக மதியம் 12:30 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்ற போது

குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இம் மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டார்.
Previous Post Next Post


Put your ad code here