கடந்த 08 ஆம் திகதி வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் மகா சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த ஆலய பரிபாலன சபையின் நிர்வாகிகள் மீதும், சிவ பக்தர்கள் மீதும் பொலிஸார் நடாத்திய வன்முறைகளை எதிர்த்தும், கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவபக்தர்களை விடுவிக்கக் கோரியும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை(15.03.2024) முற்பகல்-10 மணியளவில் வவுனியாவில் பாரிய வெகுஜனப் போராட்டமொன்று இடம்பெறவுள்ளது.
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது.
Tags:
sri lanka news