ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்..!!!


மகாவலி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணின் உயிரை இளைஞர்கள் குழு ஒன்று காப்பாற்றியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த யுவதி நேற்று (29) இரவு 7.00 மணியளவில் மஹியங்கனை - கண்டி ஏ26 வீதியில் மகாவலி ஆற்றின் வேரகங்தொட்ட பாலத்தில் இருந்து ஆற்றில் குதிக்க முயற்சித்துள்ளார்.

பாலத்தின் கொன்கிரீட் தடுப்பின் மேல் ஏறி ஆற்றில் குதிக்க தயாராக இருந்த குறித்த யுவதியை கண்ட இளைஞர்கள் குழு ஒன்று அவரை காப்பாற்ற ஓடி வந்த போது யுவதி ஆற்றில் குதித்துள்ளார்.

அதன் பின்னர், இளைஞர்கள் குழு யுவதியை மீட்டு மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். குறித்த பெண் பாலத்திற்கு வந்த பைக் மற்றும் அவரது கைப்பேசி பாலத்தின் மேல் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொலிசார் அவற்றை கைப்பற்றி, தொலைபேசியில் உள்ள எண்களுக்கு அழைத்து, சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோருக்கு தெரிவித்தனர்.

மினிபே பகுதியை சேர்ந்த யுவதி சில காலமாக மனநோயினால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here