அக்போபுர பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (29) இரவு பெண் ஒருவர் கோடரியால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
குறித்த பகுதியில் வசிக்கும் 44 வயதுடைய திருமணமான பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு அயல் வீட்டில் வசிக்கும் ஒருவர் மதுபோதையில் வந்து உயிரிழந்த பெண்ணையும் அவரது கணவரையும் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் இருவரையும் கோடரியால் தாக்கியுள்ளார்.
காயமடைந்த இருவரும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவரது கணவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags:
sri lanka news