நவகிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதைத் தவிர, அவ்வப்போது நட்சத்திரங்களையும் மாற்றும். அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதம் ஒரு முறை ராசியை மாற்றுவார். அதே சமயம் 15 நாட்களுக்கு ஒருமுறை நட்சத்திரத்தை மாற்றுவார். இப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
ஜோதிடத்தின் படி, சூரியன் ஏப்ரல் 13 ஆம் தேதி மேஷ ராசிக்குள் நுழைந்தால், இந்நிலையில் ஏப்ரல் 27 ஆம் தேதி சூரியன் அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்திற்கு சென்றுள்ளார். இந்த நட்சத்திரத்தில் மே 11 ஆம் தேதி வரை இருப்பார். பரணி 27 நட்சத்திரங்களில் 2 ஆவது நட்சத்திரமாகும். இதன் அதிபதி சுக்கிரன்.
சூரியனும், சுக்கிரனும் நட்புறவு கொண்டுள்ள கிரகங்கள் என்பதால், இந்த நட்சத்திர பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை வழங்கவுள்ளது. இப்போது சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். சிலருக்கு புதிய வருமானங்கள் திறக்கப்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புத்திசாலித்தனமாக முதலீடுகளை செய்தால், நல்ல லாபத்தைப் பெறலாம். உறவுகளைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது நற்பலன்களை வழங்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் கடின உழைப்பாலும், திறமையாலும் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் திறப்பதோடு, நிறைய பணத்தையும் சேமிக்க முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். நீண்ட கால மனக் கவலைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுடனான உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது ஒரு அற்புதமான பலன்களை வழங்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெறுவார்கள். வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டுமென்ற ஆசை இருந்தால், அது நிறைவேறும். வணிகர்கள் தங்கள் கடின உழைப்பிற்கான பலன்களைப் பெறுவார்கள். புத்திசாலித்தனத்தால் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். அதே சமயம் நிறைய பணத்தை சேமிக்கவும் முடியும். முதலீடுகளை செய்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். உறவுகளில் இருந்த மன கசப்புகள் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
Tags:
Rasi Palan
