இலங்கையிலிருந்து சென்று 'சரிகமப' நிகழ்ச்சியில் சாதித்துக்காட்டிய மலையக இளைஞன்.. மெய்சிலுர்த்துப்போன நடுவர்கள்..!!!


"சரிகமப” நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு பதுளை மாவட்டம் பூனாகலையை சேர்ந்த இந்திரஜித் என்ற இலங்கை இளைஞருக்கு கிடைத்துள்ளது.

ஜீ தமிழில் ‘சரிகமப’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த மூன்று சீசன்கள் கொடுத்த வெற்றியை தொடர்ந்து தற்போது நான்காவது சீசன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 3 ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டது.

இதில், இலங்கையை சேர்ந்த கில்மிஷா மற்றும் அசானி கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

ஈழக் குயிலான கில்மிஷா வெற்றி வாகை சூடி பல தசாப்த வரலாற்றை மாற்றியிருந்தார்.


இந்த சூழலில் மலையகத்தினை சேர்ந்த மற்றுமொரு இளைஞருக்கு சரிகமப மேடை வாய்ப்பு கொடுத்துள்ளது.

இந்தியத் திரையுலகில் ‘பாடும் நிலா’ என்று அனைவராலும் அழைக்கப்படும் பிரபல இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் தீவிர பக்தராக இருக்கும் இந்திரஜித் அவருடைய பாடலை பாடி நடுவர்களை கலங்க வைத்துள்ளார்.

இது குறித்த ப்ரோமோ வெளியாகி ஒட்டுமொத்த இலங்கையர்களையும் பெருமை கொள்ள வைத்துள்ளது. கடல் கடந்து சாதிக்க சென்றிருக்கும் இந்திரஜித் வெற்றி பெற அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.
Previous Post Next Post


Put your ad code here