க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிந்த உடனேயே உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்படும்..!!!


இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு தேர்வு முடிந்த உடனேயே கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கடந்த கொவிட் அனர்த்தத்தின் போது பாடசாலைகள் மூடப்பட்டமையினால் விடுபட்ட கல்வி மற்றும் பாடசாலை பரீட்சை அட்டவணையை மீட்டெடுப்பதற்கான திட்டத்தின் படி இவ்வருடம் குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.


மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் தேசிய கல்வி நிறுவகத்தின் உத்தியோகபூர்வ இணைய வானொலியை (NIE Visual Radio) ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here