Monday 15 April 2024

12 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்துள்ள குரு சூரிய சேர்க்கை: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..!!!

SHARE

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதைத் தவிர, அவ்வப்போது கிரகங்களின் சேர்க்கையும் நிகழும். அப்படி நிகழும் கிரக சேர்க்கைகளுள் சில பல மாதங்கள் மற்றும் ஆண்டுகள் கழித்து நிகழலாம்.

அந்த வகையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஏப்ரல் 13 ஆம் தேதி மேஷ ராசிக்குள் நுழைந்தார். இந்த மேஷ ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணித்து வருகிறார். இதனால் மேஷ ராசியில் குரு சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இந்த சேர்க்கை சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்துள்ளது. இந்த சேர்க்கை மே 01 ஆம் தேதி வரை இருக்கும்.


ஏனெனில் மே 01 ஆம் தேதி குரு ராசியை மாற்றவுள்ளார். மேஷ ராசியில் நிகழ்ந்துள்ள குரு சூரிய சேர்க்கையின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கையானது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரவுள்ளது. இப்போது மேஷத்தில் உருவாகியுள்ள குரு சூரிய சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.


மேஷம்

மேஷ ராசியின் முதல் வீட்டில் குரு சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். செல்வம் பெருகும். சமூகத்தில் மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும்.


கடகம்

கடக ராசியின் 10 ஆவது வீட்டில் குரு சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் முதலீடுகளால் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். குடும்பத்தில் உள்ள சண்டைகள் அனைத்தும் தீரும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.


மீனம்

மீன ராசியின் 2 ஆவது வீட்டில் குரு சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். பேச்சால் பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தொழிலதிபர்கள் சிக்கிய பணத்தைப் பெறுவார்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
SHARE