யாழில் இளம் ஆசிரியை உயிரிழப்பு ..!!!



யாழ்ப்பாணத்தில் இளம் ஆசிரியை ஒருவர் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.

வண்ணார்பண்ணை, வடமேற்கு, ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி கல்பனா (37வயது) என்ற, அராலி முருகமூர்த்தி பாடசாலையின்
ஆங்கில ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் சுகயீனம் ஏற்பட்டது. இந்நிலையில் அவருக்கு பில்லி சூனியம் ஏற்பட்டதாக தெரிவித்து தந்தையும் குறித்த ஆசிரியையும் இளவாலையிலுள்ள கிறிஸ்துவின் சபையில் கடந்த 05.04.2024 அன்று தொடக்கம் தங்கி நின்று பில்லி சூனியம் பார்த்து வந்தனர்.

இந்நிலையில் இவருக்கு கடந்த 13ம் திகதி வயிற்றுவலியும் வாந்தியும் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் போதகர் மூலம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் அவர் உயிரிழந்தார்.

மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதோடு மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here