முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மகளின் வீட்டிற்கு சென்ற மாமனார் மீது மருமகன் தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார்
முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் இந்த சம்பவம்(13.04.2024) இடம்பெற்றுள்ளது
62 அகவையுடைய பொன்னுச்சாமி செல்வரூபான் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்,
இவரது உயிரிழப்பு தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்ததில் தாக்குதலை மேற்கொண்ட மருமகனை கைது செய்துள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
Tags:
sri lanka news