12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..!!!


ஜோதிடத்தின் படி, 2024 ஆம் ஆண்டின் மே மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதத்தில் இருந்து பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது. ஏனெனில் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படும் குரு பகவான் மே மாதத்தின் தொடக்கத்தில் ரிஷப ராசிக்கு செல்கிறார்.

ரிஷப ராசியானது சுக்கிரனின் ராசியாகும். சுக்கிரனும், குருவும் நட்பு கிரகங்கள் என்பதால், இந்த குரு பெயர்ச்சியானது நற்பலன்களை அளிக்கும். இதுவும் இந்த மே மாதத்தில் ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரனும் இந்த ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் ரிஷப ராசியில் குரு சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது.

இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதுவும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்துடன், எதிர்பாராத அளவில் லாபமும் கிடைக்கப் போகிறது. இப்போது 12 ஆண்டுகளுக்கு பின் ரிஷப ராசியில் நிகழும் குரு சுக்கிர சேர்க்கையால் நற்பலனைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.


கன்னி

கன்னி ராசியின் 9 ஆவது வீட்டில் குரு சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். திட்டமிட்ட வேலைகளும் பிரச்சனைகளின்றி முடிவடையும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். பேச்சால் மற்றவர்களை எளிதில் ஈர்ப்பீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் தேடி வரும். வெளிநாடு சென்று படிக்க விரும்பினால், அந்த ஆசை நிறைவேறும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய வாகனம் அல்லது வீடு வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டில் குரு சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களின் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். கூட்டு வணிகம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்

கடக ராசியின் 11 ஆவது வீட்டில் குரு சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும்.
Previous Post Next Post


Put your ad code here