கொழும்பைவிட்டு வெளியேறும் சுமார் 13 லட்சம் மக்கள்..!!!


தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சுமார் 13 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வர் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திருமதி நவோமி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி புகையிரத திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை ஆகியன இணைந்து பயணிகளுக்கான போக்குவரத்து திட்டத்தை தயாரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி கொழும்பில் இருந்து புத்தளம், தம்புள்ளை, கண்டி, காலி, ஹைலெவல் ஆகிய ஐந்து பிரதான பாதைகளில் பயணிக்கும் பஸ்களின் எண்ணிக்கை 700 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதோடு மகும்புர, கடவத்தை, மத்திய பேருந்து நிலையம், பஸ்டியன் மாவத்தை, ஹைலெவல் வீதியில் இருந்து பயணிக்கும் பேருந்துகளின் எண்ணிக்கை வழமையை விட அதிகரிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post


Put your ad code here