Friday, 19 April 2024

யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய 15 வயதான சிறுவனின் மரணம்..!!!

SHARE

யாழ் இந்துக்கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதான மாணவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக் கூறப்படுகின்றமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மாணவர் கடந்த 16.04.2024 அன்று உயிரிழந்துள்ளதாக் கூறப்படுகின்றது.

சம்பவத்தில் அனலைதீவைப் பிறப்பிடமாகவும், அரியாலை, யாழ்ப்பாணத்தை வாழ்விடமாகவும் கொண்ட கிருபானந்தன் கிரிசிகன் எனும் மாணவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் மாணவனின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
SHARE