பணத்தை சேமிப்பதில் கில்லாடியான 5 ராசியினர்... உங்க ராசி இருக்கானு பாருங்க..!!!
பணத்தை சேமிப்பதில் கில்லாடியான 5 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான விடயம் என்னவெனில் நிதி என்று தான் கூற வேண்டும். பணத்தை சரியான முறையில் சம்பாதிப்பது மட்டுமின்றி, அதனை சரியான வழியில் செலவு செய்வது மிகவும் முக்கியமாகும்.
அந்த வகையில் சரியான முறையில் பணத்தை சேமிப்பதில் கில்லாடியான ராசிக்காரர்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
ரிஷபம்:
ரிஷப ராசியினரைப் பொருத்த வரையில் தங்களது பணத்தை எவ்வாறு நிர்ணயிப்பது என்பதில் முழு கட்டுப்பாட்டுடன் இருக்கின்றனர். செல்வத்தை பாதுகாப்பாக நிர்வகிக்கும் ஞானம் இந்த ராசியினருக்கு உள்ளது. தேவைக்கும், விருப்பத்திற்கும் வித்தியாசத்தினை சரியாக புரிந்து கொண்டு அதற்கேற்ப பணத்தை புத்திசாலித்தனமாக செலவு செய்வார்கள்.
கன்னி:
கன்னி ராசியினர் பணக்கார ராசிகளில் ஒன்றாக இருப்பதுடன், சிறுவயதிலிருந்தே இவர்களிடம் பணம் இருப்பதால், அதனை எவ்வாறு செலவு செய்வது என்பதை நன்கு தெரிந்து செலவு செய்வார்கள். பணத்தை நிர்வகிக்க வேண்டிய ஞானம் இவர்களிடம் அதிகமாக இருப்பதால், நல்ல காரியத்திற்கு செலவு செய்வார்களே தவிர பொழுதுபோக்கிற்காக பணத்தை செலவு செய்யவே மாட்டார்கள்.
துலாம்:
துலாம் ராசியினரைப் பொறுத்தவரையில் வாழ்க்கையில் தங்கள் விரும்பும் அனைத்தையும் வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையை இருப்பதுடன், அதனை நிறைவேற்ற முயற்சியும் செய்வார்கள். பணத்தை எவ்வாறு முதலீடு செய்வது, சேமிப்பது என்பதில் முழுமையான அறிவு இருப்பதால், தான் பணத்தை சம்பாதிப்பது மட்டுமின்றி, தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் பணத்தை சம்பாதிக்க கற்றுக்கொடுப்பார்கள்.
மகரம்:
மகர ராசியினரைப் பொறுத்தவரையில் தங்களது இலக்குகளை மட்டுமே கவனத்தில் கொள்வதுடன், வாழ்க்கையில் அடைய விரும்புவதை முழு முயற்சியில் ஈடுபட்டு அடைந்து விடுவார்கள். மிகவும் புத்திசாலித்தனமாக பணத்தை சம்பாதிப்பதுடன், மற்றவர்களுக்கு பணம் சம்பாதிக்க ஆலோசனையும் வழங்குவார்கள். இவர்கள் முதலீடு செய்வதில் சரியான வழியை தெரிவு செய்வார்கள்.
கும்பம்:
கும்ப ராசியினரைப் பொறுத்தவரையில், எந்தவொரு திட்டத்திலும் பணத்தை முதலீடு செய்வதற்கு முன்பு, அதிலுள்ள சாதக பாதகங்களை கணக்கிட்டு பின்பு தான் செயல்படுவார்கள். பண விடயத்தில் இவர்களை போல புத்திசாலி யாரும் இல்லை என்று தான் கூற வேண்டும். இவர்களது வங்கிக் கணக்கில் எப்பொழுதும் பணம் இருந்து கொண்டிருப்பதுடன், எதிர்காலத்தில் வளர்ச்சிக்கு முன்கூட்டியே அறிந்து கொள்வார்கள். எந்தவொரு இடரையும் எளிதில் சமாளித்து விடுவார்கள்.