நுரைச்சோலை நகரில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர் நுரைச்சோலை கொய்யாவாடிய பகுதியைச் சேர்ந்த சமிர லசந்த பெர்னாண்டோ (26) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் மின்சார சபையில் பணியாற்றும் ஊழியர் எனத் தெரியவந்துள்ளது.
கல்பிட்டியில் இருந்து தேங்காய் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது.
இளைஞன் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேங்காய் லொறியில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news