யாழில் கோர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த நபர்..!!!


யாழ். கல்வியங்காடு இலங்கை நாயகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் நேற்றுமுன்தினம் (04-05-2024) இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த முதியவர் ஒருவர் புதிய செம்மணி வீதி ஊடாக கடக்க முற்பட்ட வேளை அவருக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் சைக்கிள் பயணித்த நல்லூரை சேர்ந்த 61 வயதான க.மோகனகுமார் என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (05.04.2024) உயிரிழந்துள்ளார்.

சாரதி அனுமதி பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிளினை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய 21 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போது குறித்த இளைஞனை எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here