குடும்பப்பெண் மீது சரமாரி வெட்டு: கணவன் தலைமறைவு..!!!


யாழில் நேற்று (05) குடும்ப பெண் மீது கணவனால் சரமாரியாக வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அப்பெண் சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் யாழ். குருநகரில் நேற்று மாலை 05.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இதில் பிரதீபன் சுரேக்கா (வயது 34) என்ற குடும்பப்பெண்ணே தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார்

சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பெண்ணின் உடலில் ஆழமானகாயங்கள் உட்பட பதினொரு (11) வெட்டுக்காயங்கள் உள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த பெண் வீட்டில் நின்ற போது கணவனால் வீதிக்கு அழைப்பட்ட நிலையில் துரத்தி துரத்தி வெட்டப்பட்டுள்ளார் இதனை அடுத்து உறவினர்கள் மற்றும் ஊரவர்களால் மீட்கப்பட்டு நோயாளர் காவு வண்டியில் யாழ் போதனா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் .

இதேவேளை மனைவி மீது வெட்டி தாக்குதல் மேற்கொண்ட கணவன் பொலிஸாரின் கைதுக்கு பயந்து அவ்விடத்தை விட்டு தலைமறைவாகி உள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here