பாடசாலைகளை அண்மித்த வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை..!!!


யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் முடிவுறும் நேரங்களை அண்மித்த நேரங்களில் பாடசாலையை அண்மித்த வீதிகளில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை தடை விதிக்கப்பட்டுள்ளது

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோரின் இணைத்தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லும் பொதும் , பாடசாலையில் இருந்து வீடு திரும்பும் போதும் பாடசாலைகளை அண்மித்த வீதிகளில் கனரக வாகனங்கள் வேகமமாகவும் , சில நேரங்களில் வீதி ஒழுங்கு விதிகளை மீறியும் பயணிப்பதாக கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

அதை அடுத்து பாடசாலை ஆரம்பமாகும் , முடிவுறும் வேளைகளில் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் கனரக வாகனங்களை பயணிப்பதை தடை செய்வதாக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது , அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here