வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக பத்திரண பொறுப்பேற்பு..!!!


வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக விதான பத்திரணஹாலகே சமன் தர்மசிறீ பத்திரண இன்றையதினம் சம்பிரதாயபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார பணிமனையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக இருந்த, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தனது பொறுப்புக்களை புதிய பணிப்பாளர் பத்திரணவிடம் கையளித்தார்.

இதன்போது வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் உள்ளிட்ட சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
Previous Post Next Post


Put your ad code here