மரத்திலிருந்து தவறிவிழுந்த இளைஞன் உயிரிழப்பு..!!!



உடுவில் பகுதியில் மரத்திலிருந்து தவறிவிழுந்த இளைஞன் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இதில் ஆலடி உடுவில் மானிப்பாயைச் சேர்ந்த சசிக்குமார் ரூபின்சன் என்ற 20 வயது இளைஞனே உயிரிழந்தவராவார்.

குறித்த இளைஞன் கடந்த 12ஆம் திகதி மாங்கனிகளை பறிப்பதற்காக மாமரமொன்றில் ஏறிய நிலையில் தவறிவிழுந்ததில் சுயநினைவை இழந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


இவர் பலாலி இராணுவ முகாமில் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தராக கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மரண விசாரணைகளை திடீர் மரணவிசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Previous Post Next Post


Put your ad code here