வவுனியாவில் நுங்கு திருவிழா..!!!


வவுனியா மருக்காரம்பளையில் தமிழரின் பாரம்பரிய பறை இசையுடன் நுங்கு திருவிழா இன்று (12) நடைபெற்றது.

இதன்போது பனை மரத்தின் பயன்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், பனை மரத்தின் உற்பத்திப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மேலும் கலை நிலா கலையகத்தினால் 'குளக்கரையை பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் நாடக ஆற்றுகையும் நடைபெற்றிருந்தது.

சுயாதீன இளைஞர்களினால் தொடர்ச்சியாக ஐந்தாவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் இந்த நுங்கு திருவிழாவில் பெருமளவான இளைஞர்கள், யுவதிகள் பலரும் கலந்துகொண்டு நுங்குகளை பருகி மகிழ்ந்ததை இம்முறையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.



Previous Post Next Post


Put your ad code here