நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவையில் சிக்கல்..!!!



தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவையை முன்னதாக அறிவித்த திகதியில் ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை ஆரம்பிக்கப்படவிருந்த குறித்த கப்பல் சேவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சில சட்டரீதியான அனுமதிகள் உள்ளிட்ட காரணங்களால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறித்த கப்பல் சேவையை முன்னெடுக்கும் முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.


நாளைய தினம் கப்பல் பயணத்திற்கு பதிவு செய்த பயணிகள் 17ஆம் திகதிக்கு பின்னர் அவர்கள் விரும்பிய திகதிக்கு மாற்றம் செய்து பயணிக்க முடியும். அல்லது கப்பல் பயணத்திற்கு செலுத்திய கட்டணத்தை மீள பெறமுடியும். என முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here