தமிழினப்படுகொலை சாட்சிய முற்றம்..!!!


தமிழினப் படுகொலையின் வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கில் அரச பயங்கரவாதம் நடாத்திய இனப்படுகொலைகளை திகதி வாரியாக தொகுத்து யாழ்ப்பாணத்தில் ஆவணகாட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

நல்லூரடியில் உள்ள தியாகதீபத்தின் நினைவிடத்தின் முன்னால் ”தமிழினப்படுகொலை சாட்சிய முற்றம்” என்ற பெயரில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஆவணப் பிரிவினரால்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் நாம் அனுபவித்தவற்றை ஆவணப்படுத்தல்கள் மற்றும் நினைவுகூர்வதன் ஊடாக அடுத்த சந்ததியினருக்கு நாம் இழந்தவற்றையும், எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் கடத்திச் செல்ல வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.








Previous Post Next Post


Put your ad code here