யாழ்ப்பாணம் - கீரிமலை கருகம்பனை அந்திரானை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வருடாந்த மரபுவழி வேள்விப்பொங்கல் இன்றைய தினம் சனிக்கிழமை காலை இடம்பெற்றது.
நீண்ட கால வேள்விப் பாரம்பரியத்தைக் கொண்ட ஆலயத்தில் வேள்விப் பொங்கலுக்காக கடந்த வெள்ளிக்கிழமை(24) விளக்கு வைத்தல் நடைபெற்றதுடன் இன்று வைரவப் பெருமானுக்கு பொங்கல் , மடை பரவி விசேட வழிபாடுகள் இடம்பெற்றதுடன் சுகாதார கட்டுப்பாடுகளுக்கமைய கிடாய்கள், சேவல்கள் காணிக்கையாக்கப்பட்டு அடியார்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
மரபு வழியாக நடைபெற்றுவரும் இப் பாரம்பரிய வழிபாட்டு முறையில் யாழ் குடாநாடு கடந்து ஏனைய பிரதேசங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டதுடன் வைரவப்பெருமானுக்கு ஏராளமான கிடாய்கள், சேவல்கள் காணிக்கையாக்கப்பட்டது.