யாழில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு..!!!



யாழ்ப்பாணத்தில் நண்பர் ஒருவருடன் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

தொல்புரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய தவராசா கோபிக்குமரன் எனும் மாணவனே உயிரிழந்துள்ளார்.

மாணவன் அவரது நண்பருடன் மதியம் கடைக்கு சென்று விட்டு , வீடு திரும்பும் போது, சுழிபுரம் சந்திக்கு அருகாமையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அதனை அடுத்து மாணவனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்த வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

மாணவனுக்கு இதய வால்வில் ஏற்பட்ட சுருக்கம் காரணமாகவே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here