Wednesday 14 August 2024

இன்றைய ராசிபலன் - 14.08.2024..!!!

SHARE


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப அமைதியான நாளாக இருக்கும். நீங்கள் சாந்தமான குணத்தோடு இன்றைய நாளை கடந்து செல்வீர்கள். அமைதியின் மறுவருவம் நீங்களாகத்தான் இருப்பீர்கள். இதனால் உங்களுக்கு பெரிய அளவில் பிரச்சனைகளை வராது. யாராவது உங்களை சீண்டினாலும் நீங்கள் ஒதுங்கி செல்வீர்கள். வேலையிலும் தொழிலிலும் சுமூகமான போக்கே நிலவும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்கவும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இன்று ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே உங்களுடைய நாளை தொடங்க வேண்டும். தினமும் வேலைக்கு, தொழிலுக்கு 8 மணிக்கு கிளம்புவீங்க என்றால் இன்று 7 மணிக்கு கிளம்பி விடுங்கள். சீக்கிரமாக உங்கள் அன்றாட வேலையை தொடங்கவும். அப்போதுதான் நல்லது நடக்கும். இல்லை என்றால் எல்லா வேலையிலும் தாமதம் ஏற்படும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். லேட்டாக அலுவலகம் சென்று பள்ளிக்கூடம் சென்று திட்டுவாங்க.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். எதிலும் நீங்கள் திறமையாக செயல்படுவீர்கள். மேலதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். பிரமோஷன் கிடைக்கும். தொழிலில் உங்களை வீழ்த்துவதற்கு யாராலும் முடியாது. அயராது உழைத்து நல்ல லாபத்தை சம்பாதிப்பீர்கள். அடுத்தவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு வாழ்வீர்கள்.


கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று உறவுகள் நட்புகளோடு நேரத்தை செலவழிக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வீண் விரைய செலவுகளை குறைப்பதற்கு அயராது பாடுபடுவீர்கள். வேலையில் உற்சாகம் அதிகரிக்கும். சுறுசுறுப்பாக இன்றைக்கான வேலையை இன்றே முடித்தாக வேண்டும் என்று உறுதிமொழி எடுத்து உழைப்பீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கோபம் வரும். பிரச்சனைகள் வரும். தலைவலி வரும். டென்ஷனை சமாளிக்க முடியாமல் நிம்மதியாக தூங்க வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆனால் நிம்மதியான தூக்கமும் வராது. சில பல அசவுகரியங்களை கொடுக்கக்கூடிய இந்த நாளை கடந்து செல்வதில் சிரமங்கள் இருக்கும். வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்க நல்லது நடக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பயம் கலந்த உணர்வு இருக்கும். எந்த ஒரு முடிவையும் சரியாக எடுக்க முடியாமல் திண்டாடுவீர்கள். புதிய முயற்சிகளை நாளை தள்ளி போடுங்கள். பெரியவர்களின் ஆலோசனையை கேளுங்கள். அடம் பிடிக்காதீர்கள். செலவை குறைக்கவும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களோடு பழக வேண்டாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து கிடைக்கும். நான்கு பேர் உங்களை புகழ்ந்து பேசுவார்கள். உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் விருந்தாளிகளின் வருகை சுப செலவை ஏற்படுத்தும். வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். டார்கெட்டை சரியான நேரத்தில் முடித்துக் கொடுத்து விடுவீர்கள். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் தெரியும். இரவு நிம்மதியான தூக்கம் வரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமங்கள் நிறைந்த நாளாக தான் இருக்கும். சின்ன சின்ன காரிய தடை வரும். சோம்பேறித்தனம் இருக்கும். இன்றைக்கான வேலையை நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று கொஞ்சம் அலடச்சிய போக்கோடு இருப்பதால் சின்ன சின்ன திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். கொஞ்சம் சுறுசுறுப்பாக இருந்தால் இந்த நாள் பெரிய அளவில் பாரமாக தெரியாது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சோதனை நிறைந்த நாளாக இருக்கும். கடவுள் உங்களுக்கு நிறைய சோதனையை கொடுப்பான். ஆனால் அதில் எல்லாம் நீங்கள் தேர்ச்சி பெறுகிறீர்களா என்பதுதான் கேள்வி. பிரச்சினைகள் வரும். சோர்வு வரும், தோல்விகள் வரும், ஆனால் துவண்டு போகக்கூடாது. உற்சாகம் மட்டும்தான் உங்கள் மனதில் இருக்க வேண்டும். பயம் இருக்கக் கூடாது குலதெய்வத்தை நினைத்து இன்றைய வாழ்க்கை பயணத்தை தொடரவும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்ல புது முயற்சிகள் கை கொடுக்கும். அதில் வெற்றியும் காண்பீர்கள். புதிய வேலை, புதிய தொழில் தொடங்குவது, போன்ற முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். வங்கி கணக்கு தொடங்குவது, புது சீட்டு கட்டுவது, போன்ற விஷயங்களை இன்று துவங்கலாம். லாபம் நிறைந்த நாளாகவும் இருக்கும். அடமானம் வைப்பது, கடன் வாங்குவது போன்ற காரியங்களை இன்னைக்கு செய்யாதீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். சுப செலவுகள் உண்டாகும். செலவுக்கு ஏற்ற வருமானமும் இருக்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். பெற்றவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வாரா கடன் வசூல் ஆகும். சந்தோஷம் பெருகும் நிம்மதி இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று கடவுளின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். சின்ன சின்ன பண பிரச்சனை வந்தாலும் அதை சமாளித்து விடுவீர்கள். பெரியவர்களை மதித்து பேச பழகிக் கொள்ளுங்கள். வாழ்க்கை துணையோடு வாக்குவாதம் செய்யாதீர்கள். நீண்ட தூர பயணம் நன்மையை தரும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
SHARE