Monday 16 September 2024

யாழில். 13 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் தவறான முடிவால் உயிர்மாய்ப்பு..!!!

SHARE
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வெவ்வேறு பகுதிகளில் மூவர் தவறான முடிவெடுத்து தமது உயிரை மாய்த்துள்ளார்கள்.

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவர் , வீட்டார் வெளியில் சென்ற சமயம் வீட்டில் தனது உயிரை மாய்த்துள்ளார்.

பெரியவிளான் பகுதியை சேர்ந்த 13வயது சிறுவன் , தொலைபேசியில் கேம் விளையாட தந்தையிடம் தொலைபேசியை கேட்ட போது. தந்தை தொலைபேசியை கொடுக்காததால் வீட்டின் அறை ஒன்றுக்குள் சென்று தனது உயிரை மாய்த்துள்ளான்.

நெடுந்தீவு பகுதியில் 33 வயதுடைய இளைஞன் தனது உயிரை மாய்த்துள்ளான்.
SHARE