அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பு..!!!
அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்காக விடுமுறை வழங்குமாறு அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பெப்ரல்அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த சட்டத்தை மீறும் நிறுவனத் தலைவர் நீதிமன்றத்தின் முன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு இலட்சம் அபராதமும் ஒரு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் தமக்கு தெரிவிக்குமாறும் பணியாளர்களை பெப்ரல் அமைப்பு கோரியுள்ளது.
அதன்படி, அரச அதிகாரிகளின் சிறப்பு விடுமுறையாக ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்ல குறைந்தபட்ச நேரத்தை 4 மணி நேரம் என்று குறிப்பிடுகின்றது.
இருப்பினும், எழுத்துப்பூர்வ உத்தரவில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு இதுபோன்ற சிறப்பு விடுமுறைகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்பதால், வாக்களிக்க ஊழியர்களுக்கு முதலாளிகள் விடுமுறை அளிப்பதில்லை என்று முறைப்பாடு வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தனியார் துறை ஊழியர்களுக்கு வாக்களிக்கச் செல்வதற்கும் வருவதற்கும் அனுமதிக்கும் தூரம், நேரம் தொடர்பிலான அறிவிப்பினை மனித உரிமைகள் ஆணைக்குழு உருவாக்கியுள்ளது.