யாழில். விபத்து - தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு..!!!
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கண்ணதாசன் எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
வேலணை பகுதியில் இருந்து அராலி சந்தியை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி, எதிரே வந்த ஜே.சி.பி வாகனத்தினுள் அகப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்