தயாராகிறதா ‘கஜினி – 2’?


இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனின் 23வது படத்தை இயக்கி வருகிறார்.

தனது நடிப்பில் உருவாகி தீபாவளி வெளியீட்டுக்குத் தயாராகியுள்ள ‘அமரன்’ திரைப்படத்தின் பிரமோஷன் வேலைகளில் தற்போது பிசியாகியுள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்த பிரேக்கில் தனது அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளாராம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். சிவகார்த்திகேயன் படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யாவை வைத்து ‘கஜினி – 2’ படத்தை இயக்கவுள்ளார் என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், ‘கஜினி’ படத்தின் தயாரிப்பாளரான சேலம் சந்திரசேகர் காலமாகிவிட்டதால், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க அவரது குடும்பத்திடம் உரிமம் பெற வேண்டும்.

இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்க ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். சுமூகமாக இது நடந்து முடிந்தால் விரைவில் ‘கஜினி – 2’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

2005ஆம் ஆண்டு வெளியான ‘கஜினி’ திரைப்படம் வசூல் ரீதியான பிளாக் பஸ்டர் திரைப்படம் மட்டுமின்றி கோலிவுட்டின் கல்ட் கிளாசிக் திரைப்படமாகவும் தற்போது வரை பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டாம் பாகத்தில் சஞ்சய் ராமசாமியின் கதையே தொடருமா? அல்லது முற்றிலும் வேறொரு கதையாக இருக்குமா ? குறிப்பாக, தமிழ் சினிமாவைத் தொடர்ந்து துரத்தி வரும் இரண்டாம் பாகம் செண்டிமெண்டை ‘கஜினி’ முறியடிக்குமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
Previous Post Next Post


Put your ad code here