இன்றைய ராசிபலன் - 27.10.2024..!!!


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளை எல்லாம் பொறுப்போடு நேரத்திற்கு செய்து முடிப்பீர்கள். விடுமுறை நாள் என்பதால் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் வேலை பளு அதிகமாக தான் இருக்கும். இரண்டு வேலை சமைப்பதற்குப் போக, நான்கு வேலையை சமைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வீட்டில் விருந்தாளிகளின் வருகையும் இருக்கும். பண்டிகை கலை கட்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் அமைதியான நாளாக இருக்கும். உங்களுடைய வேலையில் எந்த பிரச்சனையும் இருக்காது. வியாபாரத்திலும் பெரிசாக பிரச்சனைகள் வர வாய்ப்பு இல்லை. வீட்டில் சுபகாரிய பேச்சுக்கள் நடக்கத் தொடங்கும். சுப செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். பண்டிகை நாட்கள் என்றாலும் செலவை குறைப்பதே உங்களுக்கு உத்தமும். அதிக செலவு செய்தால் பிறகு இந்த மாத இறுதியில் நிதி நிலைமை நெருக்கடி ஆகும் பார்த்துக்கோங்க.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது எது, கெட்டது எது என்று புரிந்து கொள்ளக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் இருக்கும் எதிரிகள் நண்பர்கள் யார் என்பதை பிரித்து ஆராய்ந்து விடுவீர்கள். வியாபாரத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட எதிரிகளும் சரணடைவார்கள். தெளிவாக இந்த நாளை நகத்தைச் செல்வீர்கள். இதுநாள் வரை ஏமாந்தவர்கள் இன்று கண்விழித்துக் கொள்வீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு உண்டாகும். உங்களுடைய வேலைகளை சரிவர கவனிக்க முடியாது. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளவும். வேலையிலும் தொழிலிலும் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். தீபாவளிக்கு வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் தயாராகிக் கொண்டே இருப்பார்கள். சந்தோஷத்திற்கு குறைவிருக்காது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இன்று நல்லபடியாக வேலைகளை செய்வீர்கள். நல்ல செய்தி உங்கள் காதில் விழும். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். எதிரிகள் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று விடுதலை கிடைக்கும். சில பேர் எல்லாம் வாழ்க்கையை அடிமையாகவே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட அடிமை வாழ்க்கைக்கு இன்று விடுதலை கிடைக்க நிறையவே வாய்ப்புகள் உள்ளது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் உயர்வு இருக்கும். முன்னேற்றத்திற்கு தேவையான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். பிள்ளைகளுடைய எதிர்காலத்தைப் பற்றி நிறைய சிந்திப்பீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விளக்கும். கமிஷன் தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமாக நிறைய விஷயங்களை செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவியாக இருப்பீர்கள். தொழிலில் புதிய முதலீடு செய்ய அதனை முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். வங்கி கடன் கூட உங்களுக்கு சுலபமாக கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் கொஞ்சம் பொறுமையை கையாள வேண்டும். முன்கோபத்தை குறைக்க வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீங்கள் செய்யக்கூடிய வேலையில் மனதிருப்தி அடைவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். இன்று விடுமுறை நாளாக இருந்தாலும் உங்களுடைய பெண்டிங் வேலையை முடித்து விட்டு தான் வீடு திரும்புவீர்கள். அந்த அளவுக்கு சின்சியாரிட்டியில் நீங்கள் நம்பர் 1 இடத்தை பிடிப்பீர்கள். வியாபாரத்திலும் நல்ல லாபம் இருக்கும். விடாமுயற்சி உங்களுக்கான விஸ்வரூப வெற்றியை கொடுக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல காலம் அமையக்கூடிய நாளாக இருக்கும். நல்ல விஷயங்கள் எல்லாம் கைகூடி வரும். நீண்ட நாள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வாய்ப்புகள் வாசல் கதவை தட்டும். மனநிறைவான நாளாக இருக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதமும் குலதெய்வத்தின் ஆசிர்வாதமும் கிடைக்கும். இன்று மன மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. என்ஜாய் பண்ணுங்க.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். வேலையிலும் தொழிலிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். கவலை கிடையாது. உங்களுக்கு உதவி செய்ய நண்பர்களும் உறவினர்களும் உறுதுணையாக இருப்பார்கள். உடல் அசதி ஏற்படும். நிறைய தண்ணீர் குடிக்கவும். ஆரோக்கியமற்ற பொருட்களை சாப்பிட வேண்டாம். அதிக கடன் வாங்கும் பழக்கத்தை நிறுத்தி விடுங்கள். இன்று கடன் வாங்க வேண்டாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று நிதி சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணத்தை கையாளும்போது கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களில் பணத்தை முதலீடு செய்யாதீங்க. ஏமாறுவதற்கும் நஷ்டம் ஆவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு நடக்கவும். எதிலும் அவசரப்பட வேண்டாம்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று மனதில் நினைத்ததை நடத்தி காட்டுவீங்க. ஜெயம் உண்டாக கூடிய நாள் இது. நிதி நிலைமை சீராகும். தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழுங்கள். பிள்ளைகளுடைய சந்தோஷத்தில் மன நிறைவடைவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த வாக்குவாதம் சரியாகும். குடும்பத்தில் மன நிம்மதி பிறக்கும்.
Previous Post Next Post


Put your ad code here