எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள்..!!!


இன்று நடைபெற்று முடிந்த எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தற்சமயம் இடம்பெற்றுவரும் விசேட செய்தியாளர் சந்திப்பில் காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி டபிள்யூ.ஏ.தர்மசிறி இந்த முடிவுகளை அறிவித்துள்ளார்.

அதன்படி, தேசிய மக்கள் சக்தி 17,295 வாக்குகளை பெற்று 15 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 7,924 வாக்குகளை பெற்று, 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூவாயிரத்து 597 வாக்குகளை பெற்று, 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 2,612 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை பெற்றுள்ளது.

அத்துடன், பொதுமக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணி 2,612 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

சுயேட்சை குழு பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 2,568.

அதன்படி, சுயேட்சை குழு, 2 ஆசனங்களை பெற்றுக்கொண்டது.

பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி ஆயிரத்து 350 வாக்குகளை பெற்று, ஒரு ஆசனத்தை தமதாக்கிகொண்டது.

தேசிய மக்கள் கட்சி 521 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை வென்றுள்ளது
Previous Post Next Post


Put your ad code here