இன்றைய ராசிபலன் - 29.10.2024..!!!



மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன மறதி இருக்கும். அதனால் முக்கியமான வேலையை செய்யக்கூடிய, முக்கியத்துவத்தை கூட மறந்து விடுவீர்கள். நாள் இறுதியில் அச்சச்சோ, எல்லாம் போச்சே என்று கொஞ்சம் வருத்தம் அடைவீர்கள். இன்றைக்கான முக்கியமான வேலைகளை காலையிலேயே ஒரு பேப்பரில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அப்போது இன்றைக்கான முக்கியமான வேலைகள் எதுவுமே மறந்து போகாது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல ஓய்வு இருக்கும். பெரிசாக எந்த அலைச்சலும் இருக்காது. அந்தந்த வேலைகள், அந்தந்த நேரத்தில் தானாக நடக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். இன்று மாலை கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும், வெளியிடங்களுக்கு செல்வீர்கள். சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நல்ல பெயர், எதிர்பாராத பாராட்டு கிடைக்கும். உங்களுடைய மனது சந்தோஷத்தில் திக்குமுக்கு ஆடும். நீண்ட நாட்களாக பிரிந்த ஒரு நபர், மனதிற்கு பிடித்த நபரை, சந்திக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். இந்த நாள் இனிய நாள். சந்தோஷமான நாள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சோதனையான நாளாக இருக்கும். நீங்கள் நிறைய நல்ல வேலைகளை செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆனால், அதற்கான வாய்ப்புகளை கிடைக்காது. நல்லது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். நேரம் வீணாகும். அதை தவிர்க்க மனதை ஒருநிலைப்படுத்துங்கள். தியானம் செய்யுங்கள். இன்றைக்கான வேலையை இன்றைக்கே முடித்து ஆக வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு செயல்படுங்கள்.


சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் அமைதியாக, சாந்தமாக இந்த நாளை நகர்த்தி செல்வீர்கள். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இருக்காது. தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்குவது, பலகாரங்கள் செய்வது, இது போன்ற வேலைகள் நடக்கும். வேலையிலும் பெரிதாக எந்த பிரஷரும் இருக்காது. எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் குழப்பத்தோடு இருப்பீர்கள். புதிய முடிவுகள் எடுப்பதாக இருந்தால், நாளை தள்ளி போடுங்கள். புதிய முயற்சிகளையும் நாளை தள்ளிப் போடுங்கள். எதிலும் அவசரப்படாதீர்கள். கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன சண்டைகள் வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. மாணவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். தேவையற்ற நட்பை தவிர்க்க வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுக்கு நீங்களே ஊக்கத்தை கொடுத்து கொள்வீர்கள். தீபாவளிக்கு முன்பாக செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் சரியாக செய்து முடிப்பீர்கள். கடமை உணர்வு தவறாமல் நடந்து கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். உங்களுடைய தொழிலாளருக்கு கொடுக்க வேண்டிய போனஸ் கொடுத்து மன நிறைவு அடைவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. சில பேருக்கு போனஸ் வரலாம். தீபாவளியை கொண்டாட உற்சாகமும் வந்திடும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுங்கள். அவர்களுடைய படிப்பை கவனித்துக் கொள்வது நல்லது. சின்ன பிள்ளைகளை தனியாக வெளியிடங்களுக்கு அனுப்ப வேண்டாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை மிக மிக அவசியமாக தேவைப்படுகிறது. முன்கோபத்தை குறைக்க வேண்டும். ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். மேலதிகாரிகளை எதிர்த்து பேசக்கூடாது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடைய மனநிறைவு ரொம்ப ரொம்ப முக்கியம் என்று நினைக்க வேண்டும். இன்று பொறுமையை இழந்தவர்களுக்கு நிம்மதியும் இழக்கப்படும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற அலைச்சல் இருக்கும். தேவையில்லாத பயணங்கள் உடனடியாக வரும். ப்ளானே இல்லாம நிறைய விஷயங்கள் நடப்பதால், இந்த நாள் கொஞ்சம் சொதப்பலான நாளாக தான் செல்லும். உடல் ஆரோக்கியத்திலும் குறைபாடு ஏற்படும். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாளாக இன்றைய நாள் இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். கடமைகளை சரிவர செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வியாபாரத்தில் டார்கெட்டை அச்சீவ் செய்வதற்கு உண்டான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சின்ன சின்ன பிரஷர் இருந்தாலும் அதனால் எந்த பிரச்சனையும் வராது. வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை எடுப்பீர்கள்.
Previous Post Next Post


Put your ad code here