யாழ். போதனா வைத்தியசாலை படுகொலையின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல்..!!!


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 1987ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று(21) இடம்பெற்றன.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர், டொக்டர் த.சத்தியமூர்த்தி உள்ளிட்ட வைத்தியசாலை சமூகத்தினர் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்வொன்றும் நடைபெற்றது.

1987ஆம் ஆண்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் வைத்தியசாலை பணியாளர்கள் 21 பேர் உள்ளிட்ட 68 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here