குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைக்கும் கனடா..!!!


குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு கனடா தீர்மானித்துள்ளது.

முதல் தடவையாக நாட்டிற்குள் அனுமதிக்கப்படும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கனடா கடுமையாகக் குறைக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அதற்கமைய, அடுத்த வருடத்தில் 395,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படவுள்ளது.

நடப்பாண்டில் 485,000 பேருக்கு குடியுரிமை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த எண்ணிக்கை எதிர்வரும் ஆண்டுகளில் படிப்படியாக குறைக்கப்படவுள்ளது.

அதனடிப்படையில் 2026ஆம் ஆண்டில் 380,000 பேருக்கும் 2027-இல் 365,000 பேருக்கு மாத்திரம் குடியுரிமை வழங்கப்படவுள்ளது.

இதனிடையே, தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையும் அடுத்த ஆண்டில் 30,000 ஆக குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புலம்பெயர்வோருக்கு கனடா அதிகமாக சந்தர்ப்பத்தை வழங்குகின்ற போதிலும், கடந்த சில வருடங்களில் குடியேற்றவாசிகளால் கனடாவில் வீடுகளின் விலைகள் உயர்வடைகின்றமை விவாதப் பொருளாகியுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here