யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையின் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
நெல்லியடி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நெல்லியடி பொலிஸாரினால் இன்று மாலை கைது செய்யப்பட்டார்.
கட்சி ஆதரவாளர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டபோது குறித்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமுறையை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்கப்பட்ட பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.