யாழில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் 64 ஆயிரம் பேர் பாதிப்பு..!!!
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, இன்று வியாழக்கிழமை (28) மாலை 5.30 மணி நிலவரப்படி 19,560 குடும்பங்களைச் சேர்ந்த 64,621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
03 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 161 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மேலும் 77 பாதுகாப்பு நிலையங்களில் 2,113 குடும்பங்களைச் சேர்ந்த 7,271 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.