பொதுத் தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை..!!!



பொதுத் தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக எதிர்வரும் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு தினங்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை 18ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகள் அந்தந்த பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர்களிடம் இன்று கையளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தேர்தல் பணிகளுக்கு அவசியமான, மேசை, கதிரை, மண்டபம் போன்றவற்றை வழங்கச் சகல வலய கல்வி பணிப்பாளர்களும், அதிபர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here