யாழில். பூசகரை கட்டி வைத்து கொள்ளை - பெண்ணொருவர் கைது..!!!


யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயமொன்றில் பூசகரை கட்டி வைத்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , இரு கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் கைதடி பகுதியில் அமைந்துள்ள கௌரி அம்மன் ஆலயத்தினுள் , நேற்றைய தினம் புதன்கிழமை புகுந்த மூவர் அடங்கிய கொள்ளை கும்பல் , ஆலய பூசகரை தாக்கி , கட்டி வைத்து விட்டு அவரின் 02 பவுண் தங்க சங்கிலி மற்றும் 45 ஆயிரம் ரூபாய் பணத்தினை கொள்ளையிட்டுள்ளனர்.

அதன் போது பூசகர் அபயக்குரல் எழுப்பிய வேளை அயலவர்கள் ஆலயத்திற்கு சென்ற போது கொள்ளையர்களின் இருவர் கொள்ளையடித்த பணம் மற்றும் நகையுடன் தப்பி சென்ற நிலையில் , கொள்ளையர்களுடன் வந்த பெண்ணொருவர் மடக்கி பிடிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , மடக்கி பிடிக்கப்பட்ட பெண்ணை கைது செய்ததுடன் ,ஆலய பூசகர் மற்றும் , அயலவர்களிடம் வாக்கு மூலங்களை பெற்றள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார் , தப்பி சென்ற இரு கொள்ளையர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here