யாழைப் போன்று கிளிநொச்சியையும் அபிவிருத்தி செய்வேன் - அங்கஜன்..!!!


எனக்கு வாக்களித்த யாழ்.மாவட்ட மக்களுக்கு வேண்டிய அபிவிருத்திகளை நான் செய்து விட்டேன். அது போல நீங்கள் வாக்களித்தவர்கள் உங்களுக்கு என்ன செய்தனர் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், ஜனநாயக தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் கிளிநொச்சி மாவட்ட மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சிப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகளைப் பெற்றேன். அதில் 98 சதவீத வாக்குகளை யாழ்ப்பாண மாவட்ட மக்களே வழங்கியிருந்தனர்.

இம்முறை தேர்தலில் கிளிநொச்சி மக்களும் எனக்கு ஆதரவைத் தந்தால் யாழ்ப்பாணத்தில் செய்த அபிவிருத்திகளை கிளிநொச்சியிலும் செய்ய முடியும்.
கடந்த தேர்தலில் ஐம்பதாயிரம் வாக்குகளைப் பெற்ற நான் இம்முறை அதை விட அதிக வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றி கிளிநொச்சியையும் அபிவிருத்தி செய்வேன் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
Previous Post Next Post


Put your ad code here