ஜனாதிபதியின் யாழ். கூட்டத்திற்கு பணம் கொடுத்தே ஆட்களை அழைத்து வந்தார்கள்..!!!


யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அனுர குமார திஸாநாயக்கவின் கூட்டத்துக்கு பணம் கொடுத்து ஆட்களை கூட்டி வந்துள்ளார்கள். இதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க வருகிறார் என சொல்லி கூட்டம் சேர்த்ததாக அக்கட்சியின் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

அவர் இந்த ஊரை சேர்ந்தவர் இல்லையே. இதனால் தான் அவருக்கு எம்மைப் பற்றி தெரியவில்லை.

குறித்த விடயம் தொடர்பில் எமது தரப்பால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரவை காட்டி கூட்டம் கூட்டும் தேவை எனக்கு இல்லை. இதற்கு முன்னரும் நான் பல கூட்டங்களை நடத்தியுள்ளோம்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அனுர குமார திஸாநாயக்கவின் கூட்டத்துக்கு பணம் கொடுத்து ஆட்களை கூட்டி வந்துள்ளார்கள். இதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க முடியும். இது தான் அவர்கள் முதல் கூட்டம். தானாக வந்ததே எமது கூட்டம்

யாழ்ப்பாணத்தில் இருந்து இவ்வளவு காலமும் சந்திரசேகரம் ஜயா என்ன வேலை செய்தார் என்பதை காட்ட முடியுமா? இங்குள்ள மக்களின் வாக்குகளை சூறையாட மறுபடியும் தேசிய மக்கள் சக்தி பொய் சொல்கிறது - என்றார்.
Previous Post Next Post


Put your ad code here