வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!!!




வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (01) மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…

குறித்த பகுதியில் மாடுகளை சாய்த்துக்கொண்டுவந்த குடும்பஸ்தர் மீது குழுவொன்று வாளால் வெட்டியுள்ளது. இதனால் படுகாயமடைந்த அவர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அவர் ஏற்கனவே இறந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் நாவற்குளம் பகுதியை சேர்ந்த செல்வநிரோயன் வயது 46 என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே பலியாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Put your ad code here

Previous Post Next Post