
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறித்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயுவுக்கு இம்முறை விலை திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் LP எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 3,690 ரூபாவிற்கும், 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 1,482 ரூபாவிற்கும், 2.3 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயுவின் விலை 694 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.