தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!!!



2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 முதல் 12 ஆம் திகதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் கடந்த புதன்கிழமை (8) ஆரம்பிக்கப்பட்டது.

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்றிருந்தது.

இதன்போது, 323,879 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

அவர்களில், 79,787 மாணவர்கள் தமிழ் மொழியிலும், 244,092 மாணவர்கள் சிங்கள மொழியிலும் பரீட்சை எழுதினர்.
Previous Post Next Post


Put your ad code here