நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்த அர்ச்சுனா எம்.பி..!!!



நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அனுராதபுரம் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அநுராதபுரம் - கல்வல பகுதியில் போக்குவரத்து காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவைக் கைது செய்வது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் உத்தரவிட்டது.

வீதி விதிகளை மீறி மகிழுந்தைச் செலுத்தியமைக்காக காவல்துறையினர் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் மகிழுந்தைத் தடுத்து நிறுத்தியதாகவும், இதன்போது இரு தரப்பினருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் காவல்துறையினர் நேற்று முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதற்கமைய இந்த விடயம் தொடர்பான விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்தப் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இந்த வழக்கு தொடர்பில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை இன்றைய தினம் தாக்கல் செய்து ,இந்த வழக்கை இன்றைய தினமே விசாரிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, பிற்பகல் 1.30 க்கு வழக்கை விசாரிக்க அனுராதபுரம் நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய உத்தரவிட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here