கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்த துப்பாக்கிதாரியின் காதலி என்று கூறப்படும் ஒரு பெண்ணை மஹரகம பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட பெண் கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவவைக் கொலைசெய்த பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தனது காதலியுடன் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகியிருந்தமை தெரியவந்துள்ளது.
அதற்காக, அவளை நீர்கொழும்பு பகுதிக்கு அழைத்துச் செல்ல ஒரு நபர் மஹரகம பகுதிக்கு வந்துள்ளார்.
மேலும், அந்த நபரை கைது செய்த பொலிசார், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைத்தனர்.
மேற்கு மாகாண தெற்குப் பொறுப்பான துணைப் பொலிஸ் மா அதிபர் (டி.ஐ.ஜி) கயங்க மாரப்பனவின் அறிவுறுத்தலின் பேரில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news