நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசை உருவாகியுள்ளன.
அதாவது இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதாக எண்ணெய் விநியோகஸ்தர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த மூன்று வீத கொடுப்பனவை இடைநிறுத்துவதற்கு பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்ததை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை எனவும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாகவும் இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
Tags:
sri lanka news