கிளிநொச்சி-பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பளை கரந்தாய் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பளை வடக்கு கொடிகாமத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மகேந்திரன் நிசாந்தன் என்னும் இளைஞரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்
குறித்த விபத்து நேற்று நள்ளிரவு 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த லொறியும் கிளிநொச்சிப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளது.
இச்சம்பவத்தின் தொடர்புடைய லொறிச் சாரதி பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Tags:
sri lanka news